எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பயப்பட வைத்த பாரீஸ் தமிழ்ப்பொண்ணுஏதோ ஒரு அனர்த்தம் நடைபெறப் போவதாக கருதினார்கள். அப்பெண்மணி மேடைக்கு அருகில் வியர்த்து விறுவிறுக்க ஓடிவந்து, பொத்தி வைத்த
மல்லிகை மொட்டு பாடலைப் பாடும்படி கேட்டார். நீங்க ஓடி வாறதைப் பாத்தா ஏதோ குழந்தை கிழந்தை காணாமப் போயி பதபதச்சு ஓடி வர்றீங்களோ என்று பயந்தே போய்விட்டேம்மா பாடுறேம்மா பாடுறேன்.. என்ற பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சி முடிவில் அந்தப் பாட்டைப் பாடினார்.


கடந்த மாதம் 26ம் திகதி பாரீசில் பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்னக்குயில் சித்திரா, கார்த்திக் ஆகியோருடைய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நாலாயிரம் பேருக்கான கதிரைகள் போடப்பட்டிருந்தாலும் 500 பேருக்குள்ளேயே ரசிகர்கள் வந்திருந்தார்கள். இருந்தாலும் கச்சேரி அமர்க்களமாக நடைபெற்றது. கார்த்திக் நல்ல ஏற்று ஏறியபடி கண்களே மின்னும்படியாக நின்றாலும் ரசிகர்களை கரகோஷமிட வைத்தார். அத்தருணம் மண்டபத்தில் ஒரு பெண்மணி தடதடவென வேகமாக ஓடி வந்தார். அவர் வருவதைப் பார்த்ததும் பாலசுப்பிரமணியம் உட்பட எல்லோருமே பயந்துவிட்டார்கள்.
 
Best viewed on Chrome, Firefox, Opera & Safari browsers with resolutions 1360 x 768.

Copyright © 2014 Tokleistro™. Powered by Blogger™