மீண்டும் அதிமுகவில் ராதாரவி


எல்லாருடைய எதிர்பார்ப்பையும் டம்மியாக்கிவிட்டு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார் ராதாரவி. இவர் கட்சியில் இணைவது இது இரண்டாம்
முறை. முன்பு இவர் அதிமுகவில் இருந்தபோது சைதாப்பேட்டை தொகுதியில் நிற்க வைத்து எம்எல்ஏவாகவும் ஆக்கினார் ஜெயலலிதா. இடையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியை விட்டு ஒதுங்கியிருந்தார் ராதாரவி.

அதிமுகவில் பெரும் நட்சத்திர பேச்சாளராக இருந்த எஸ்எஸ் சந்திரன் மறைவுக்கு பிறகு அவருக்கு இணையான ஒருவரை தமது கட்சியில் இணைக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஜெ.வுக்கு ராதாரவியை மீண்டும் சமாதானப்படுத்தி அழைத்து வந்தால் என்ன என்று தோன்றியதாம். உடனடியாக அவரை தொடர்பு கொண்டார் ஜெ. அப்புறம் என்ன? அம்மாவின் முன்னிலையில் தன் கம்பீரத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளாமல் இணைந்துவிட்டார் ரவி.
 
Best viewed on Chrome, Firefox, Opera & Safari browsers with resolutions 1360 x 768.

Copyright © 2014 Tokleistro™. Powered by Blogger™