சந்தோஷம், பதட்டம், பயம் எல்லாமே கலந்த காவலன் -அசின் ஓப்பன் டாக்காவலன் சூட்டிங்கை முடித்துக் கொண்டு மும்பை புறப்பட்டுச் சென்றார் நடிகை அசின். இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதுடன்,
அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்ததான் நடிகை அசி‌னுக்கு எதிராக பொதுநல ஆர்வலர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்திருக்கும் காவலன் பட சூட்டிங் நடக்கும் இடங்களுக்குச் சென்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். தமிழகத்தில் வில்லங்கம் ஏற்பட்டதால் சூட்டிங்கை கேரளாவுக்கு மாற்றியது காவலன் டீம். அங்கேயும் கறுப்புக் கொடிதான்.
இதனால் எப்படா சூட்டிங் முடியும் என காத்திருந்த அசின், ஒருவழியாக காவலன் சூட்டிங்கை முடித்து விட்டார். தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலும் நடித்து முடித்த அசின், சூட்டிங் முடிந்‌த கையோடு மும்பை புறப்பட்டு சென்று விட்டார்.
காவலன் சூட்டிங் குறித்து அசின் அளித்துள்ள பேட்டியில், “வாழ்க்கையில் என்னால் மறக்கமுடியாத சூட்டிங்னா அது காவலன் சூட்டிங்காத்தான் இருக்கும்.சந்தோஷம், பதட்டம், பயம் எல்லாமே கலந்த சூட்டிங் இதுதான். தினமும் திக் திக் என இருக்கும். ஒரு கட்டத்தில் சீக்கிரம் இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டால் போதும் என்றாகிவிட்டது. ஆனால் விஜய்யும் சித்திக்கும் என்னைப் பார்த்துக் கொண்ட விதம், எனக்கு ஆதரவளித்த விதம் மறக்க முடியாதது,” என்று கூறியுள்ளார்.

அடுத்த வாரத்தில் காவலன் படத்துக்கான டப்பிங் பணிகள் நடைபெற உள்ளன. இதில் அசின் பங்கேற்று சொந்த குரலில் டப்பிங் பேசுவார் என் காவலன் யூனிட்டிங் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Best viewed on Chrome, Firefox, Opera & Safari browsers with resolutions 1360 x 768.

Copyright © 2014 Tokleistro™. Powered by Blogger™