வெளிநாட்டிலும் இவ்வளவு ரசிகரா அதிர்ந்த நடிகை


பாங்காக்கில் துணையின்றி சுதந்திரமாக நடமாட முயன்ற நடிகை கத்ரீனா
கைபை ரசிகர்கள் சூழந்து கொண்டனர். அவர்களிடமிருந்து கத்ரீனாவை போலீசார் மீட்டனர்.
பாலிவுட் புகழ் கத்ரீனா கைப், விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக பாங்காக் சென்றார். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

Manmadhan Ambu Movie Gallary


தாய்லாந்தில் தானே இருக்கிறோம்… யாருக்குத் தெரியப் போகிறது என்ற நினைப்பில் சுதந்திரமாக வெளியில் போய் வர தயாரானார். ஆனால் ஓட்டல் வாசலுக்கு வந்த போது அங்கு தன்னைப் பார்க்க ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்துபோனார்.
வெளிநாட்டிலும் தனக்கு இவ்வளவு ரசிகர்களா என வியந்த கத்ரீனா, சந்தோஷமாக ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் ஆரம்பத்தில். ஆனால் மொத்த கூட்டத்தினரும் அவரை நெருக்க, பெரும் சிக்கலாகி விட்டது. ரசிகர்கள் பிடியில் கசங்கிய அவரை ஓட்டல் ஊழியர்களும் பக்கத்தில் ரோந்து சென்ற போலீசாரும் மீட்டனர்.
 
Best viewed on Chrome, Firefox, Opera & Safari browsers with resolutions 1360 x 768.

Copyright © 2014 Tokleistro™. Powered by Blogger™