உள்ளூர்லேயே வச்சுக்கலாம் -விஜய்

Vijay
மலேசியா, லண்டன் என்று உள்ளூர் தமிழர்களை விட்டுவிட்டு உலக தமிழர்கள் முன்னிலையில் ஆடியோவை ரிலீஸ் பண்ண கிளம்பிவிட்டார்கள்
கோடம்பாக்கத்தினர். 'விண்ணை தாண்டி வருவாயா' படத்திற்காக கவுதம், லண்டனில் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இந்த பழக்கத்தை! அப்படியே கெட்டியாக பற்றிக் கொண்டது தமிழ்சினிமா. 'ஒச்சாயி' படத்திற்கு கூட ஆஸ்திரேலியாவில் ஆடியோவை ரிலீஸ் செய்து இன்டஸ்ரியை அதிர வைத்தார்கள். எந்திரன் பற்றி கேட்கவே வேண்டாம். பணக்கார குழந்தை. பல்லு முளைக்காவிட்டாலும் பபுள்கம் தின்னும்!

மீண்டும் தனது பட இசை வெளியீட்டு விழாவை லண்டனில் வைக்கப் போகிறார் சிம்பு. இவரே இப்படி என்றால் விஜய் படக்குழு சும்மாயிருக்குமா? காவலன் பட பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைக்கலாம் என்றாராம் இப்படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம். வழக்கம் போல ஃபைல் விஜய் டேபிளுக்கு போயிருக்கிறது.
அவரோ, "ஏன் மலேசியாவுல வைக்கணும், நம்ம ஊர்லயே வைக்கலாமே?" என்றாராம். "சிங்கப்பூர்லயாவது..." என்று ஆசைப்பட்ட ஷக்தி சிதம்பரத்திற்கு விஜய் சொன்ன பதில் 'நோ' என்பதுதான். என்ன காரணம் என்பதுதான் புரியவேயில்லை.
 
Best viewed on Chrome, Firefox, Opera & Safari browsers with resolutions 1360 x 768.

Copyright © 2014 Tokleistro™. Powered by Blogger™