ரமலத் பேச்சில் உண்மை இல்லை, மறுக்கும் பிரவுதேவா


'செஸ்' ஆட்டம் போலாகிவிட்டது ரமலத்-பிரபுதேவா உறவு. தன்னை பற்றி கடுமையாக விமர்சித்து வார இதழ் ஒன்றிற்கு ரமலத் அளித்த பேட்டி,


வெளிநாட்டில் இருந்த பிரபுதேவாவுக்கு விலாவாரியாக வாசித்து காண்பிக்கப்பட்டதாம். அதன் பின் அவர் வைக்கும் மூவ் ஒவ்வொன்றும் ரமலத்துக்கான செக் அலர்ட்!


புத்தகம் கடைக்கு வந்த சில மணி நேரத்திற்குள்ளேயே ரமலத்துக்கு நெருக்கமாக இருக்கும் அந்த செல்வாக்கான பெண்மணியை தொடர்பு கொண்ட பிரபுதேவா, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எப்படி அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கலாம்? அந்த பேட்டியில் என்னை பற்றி அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் எதுவுமே உண்மையில்லை என்று கோர்ட்டில் வாதாடுவேன். அதுமட்டுமல்ல, எனது புகழுக்கு களங்கம் கற்பிப்பதையே லட்சியமாக வைத்திருக்கும் ரமலத்துடன் நான் எப்படி வாழ முடியும் என்றும் கேள்வி எழுப்புவேன். இது ஒன்று போதாதா நான் வழக்கிலிருந்து தப்பிக்க? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினாராம்.

ஐயோ, ரூட் இப்படி போவுதே என்று அதிர்ந்த ரமலத், அந்த பேட்டியை நான் கொடுக்கவே இல்லை. நிருபரே எழுதிகிட்டாரு என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம். இதையேதான் அவர் நீதிமன்றத்திலும் சொல்வார் என்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து பேட்டியெடுத்த நிருபர் தலையில் 'சட்னி' அரைப்பார்கள் போலிருக்கிறது.
 
Best viewed on Chrome, Firefox, Opera & Safari browsers with resolutions 1360 x 768.

Copyright © 2014 Tokleistro™. Powered by Blogger™