தொழிலதிபருடன் தபு

காதல் தேசம், சிறைச்சாலை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை தபு தற்போது இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஓரிரு படங்களை
தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களைப் பற்றிய காதல்
கிசு கிசுக்கள் ஏரளாமாக அப்போது வந்தன.
மாடல் துறையைச் சேர்ந்த உபேன் பட்டேல் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சமீப காலமாக மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரை தபு காதலித்து வருவதாக செய்திகள் வெளியாயின. மும்பை மீடியாக்களும் இவர்களது காதலை அவ்வப்போது பெரிதுபடுத்தி பேசி வருகின்றன. இதனால் அந்த தொழிலதிபர் தபு குடும்பத்தாரிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தபு குடும்பத்தினரும் ஒ.கே. சொல்லி விட்டார்களாம். இவர்களின் திருமணம் பற்றி தபு விரைவில் அறிவிக்க இருக்கிறாராம். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.
 
Best viewed on Chrome, Firefox, Opera & Safari browsers with resolutions 1360 x 768.

Copyright © 2014 Tokleistro™. Powered by Blogger™